Tuesday, 1 November 2011

எண் கூறுகளின் பெயர்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரை
1/102400 - கீழ்முந்திரை
1/1075200 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்



நான்கு யுகங்கள்

1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)

2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)

3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)

4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)

இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு சதுர்யுகம்.

71 
சதுர்யுகம் கொண்டது ஒரு மனு.

14 மனு கொண்டது ஒரு கற்பம்.

ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.


இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.

8 யுகங்கள் சேர்ந்த நாட்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்

பிரம்மாவின் ஆயுள் 100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்)

விஷ்ணு - 5,84,000 யுகங்கள்

உலகம் ஒருபோதும் முழுமையாக அழிந்து போவதில்லை. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் அவை மீண்டும் மறு சுழற்சி முறையில் புதுப்பிக்கப் படுகிறது. மீண்டும் கற்காலம், பொற்காலம், கணினிகாலம் என்று காலச்சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.
ஒரு யுகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு யுகத்திலும் நடக்கும் என்று சொல்லப் படுகிறது. நாஸ்டர்டாம் போல் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும்? என்று சொல்லும் ஆரூட வல்லுநர்களுக்கு தனது முந்தைய ஜென்மத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களது உறங்கிக் கிடக்கும் மூளையின் மறுபகுதி விழித்தெழுந்து படம் போட்டுக் காட்டி விடுகிறதாம்.
இந்த ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகளை நாமும் நன்கு நினைவு வைத்துக் கொள்வோம். ஒருவேளை அடுத்த யுகத்தில் நமக்கு மறுபிறவி ஏற்பட்டால் ஆருடம் சொல்லப் பயன்படும். (மனிதனாகப் பிறந்தால் மட்டும்.)

முப்பது கற்ப காலங்கள்
1.வாமதேவ கற்பம்

2.சுவதேவராக கற்பம்

3.நீல லோகித கற்பம்

4.ரந்தர கற்பம்

5.ரௌரவ கற்பம்

6.தேவ கற்பம்

7.விரக கிருஷ்ண கற்பம்

8.கந்தற்ப கற்பம்

9.சத்திய கற்பம்

10.ஈசான கற்பம்

11.தமம் கற்பம்

12.சாரஸ்வத கற்பம்

13.உதான கற்பம்

14.காருட கற்பம்

15.கௌரம கற்பம்

16 நரசிம்ம கற்பம்

17 சமான கற்பம்

18 ஆக்நேய கற்பம்

19 சோம கற்பம்

20. மானவ கற்பம்

21.தத்புருஷ கற்பம்

22. வைகுண்ட கற்பம்

23. லெச்சுமி கற்பம்

24. சாவித்திரி கற்பம்

25. கோரம் கற்பம்

26. வராக கற்பம்

27. வைராஜ கற்பம்

28. கௌரி கற்பம்

29. மகோத்வர கற்பம்

30 பிதிர் கற்பம்


எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து மகாயுகம் வரை கீழே தரப்பட்டுள்ளது.

எண்ஒலிப்புச் சொல்:



1 - ஒன்று (ஏகம்)
10 - பத்து
100 - நூறு
1000 - ஆயிரம்(சகசிரம்)
10,000 - பத்தாயிரம்(ஆயுதம்)
1,00,000 - நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 - பத்து லட்சம்
1,00,00,000 - கோடி
10,00,00,000 - அற்புதம்
1,00,00,00,000 - நிகற்புதம்
10,00,00,00,000 - கும்பம்
1,00,00,00,00,000 - கணம்
10,00,00,00,00,000 - கற்பம்
1,00,00,00,00,00,000 - நிகற்பம்
10,00,00,00,00,00,000 - பதுமம்
1,00,00,00,00,00,00,000 - சங்கம்
10,00,00,00,00,00,00,000 - வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 - அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 - (அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 - பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 - பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 - பிரமகற்பம்(முக்கோடி)
10,00,00,00,00,00,00,00,00,00,000 - மகாயுகம்